நேபிடாவ்: மியான்மர் நாட்டில் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அங்குள்ள ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாங்கன் உள்ளிட்ட முக்கியத் நகரங்களில் ஆங் சன் சூ காய் ஆதரவாளர்கள் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் பலர் ராணுவத்தின் அராஜகத்தை கண்டித்து தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் விதிமுறை மீறலுக்காக பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஐநா தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் ராணுவ அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ஜனநாயகவாதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அவர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் மியான்மர் நாட்டுடனான வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கக் கோரியுள்ளனர். இது தவிர ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விரைவில் இது குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை கூட்டி மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE