மஞ்சள் நிறத்தில் பென்குயின்
உலகில் முதன்முறையாக கருப்பு நிறம் இல்லாமல், மஞ்சள், வெள்ளை நிறத்துடன் காணப்படும் பென்குயின், தெற்கு அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. பெல்ஜியத்தை சேர்ந்த போட்டோகிராபர் ஆடம்ஸ், இதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''அட்லாண்டிக் கடற்கரையில் இருந்த 1.20 லட்சம் பென்குயின் பறவைகளில் இது மட்டுமே மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்பட்டது. இது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதன் நிறமிகளில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இது மஞ்சள் நிறத்தில் உள்ளது'' என்றார்.
தகவல் சுரங்கம்
இந்தியாவின் 'நைட்டிங்கேல்'
அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட வீராங்கனை என பன்முக திறமை கொண்டவர் சரோஜினி நாயுடு. இவர் 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என அழைக்கப்படுகிறார். 1879 பிப்., 13ல் ஐதராபாத்தில் பிறந்தார். சென்னை, லண்டனில் படிப்பை முடித்தார். நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சமூக, பெண் உரிமைக்காக போராடினார். உத்தரபிரதேசத்தின் கவர்னராக இருந்த இவர், நாட்டின் முதல் பெண் கவர்னர் என்ற பெயர் பெற்றவர்.
1925 - 26ல் காங்., கட்சி தலைவராக இருந்தார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE