பீமா கோரேகான் வழக்கு: வரவ ராவிற்கு 6 மாதம் இடைக்கால ஜாமின்

Updated : பிப் 22, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்ஹாப்பூர்: பீமா கோரேகான் கலவர வழக்கில் மருத்துவமனையில் முக்கிய குற்றவாளியான வரவ ராவிற்கு 6 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிசம்பரில் இரு தரப்பு மோதல் கலவரமாக வெடித்தது. புனே போலீசார் கலவரத்திற்கு காரணமான எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது, கலவரத்திற்கு நிதியுதவி
Bhima Koregaon accused Varavara Rao granted interim bail for 6 months by Bombay

கோல்ஹாப்பூர்: பீமா கோரேகான் கலவர வழக்கில் மருத்துவமனையில் முக்கிய குற்றவாளியான வரவ ராவிற்கு 6 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிசம்பரில் இரு தரப்பு மோதல் கலவரமாக வெடித்தது. புனே போலீசார் கலவரத்திற்கு காரணமான எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது, கலவரத்திற்கு நிதியுதவி செய்தது மற்றும் நக்சல்ளுடன் தொடர்பு வைத்துள்ளது என சமூக ஏற்பட்டாளர் வரவ ராவ், உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு(என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு மாற்றப்பட்டது.


latest tamil news




கொரோனா தொற்று


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான 80 வயது வரவ ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மும்பை ஜெ.ஜெ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


6 மாத இடைக்கால ஜாமின்



இந்நிலையில் ஜாமின் கோரி மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வரவ ராவிற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 6 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-பிப்-202114:04:18 IST Report Abuse
Sridhar கோர்ட்கள் மீது நம் மதிப்பு இது போன்ற செயல்களால்தான் குறைகிறது. நாட்டின் துணைராணுவ வீரர்கள் நக்சல் தீவிரவாதிகள் வன்முறைக்கு பலியானபோது இளித்து மகிழ்ந்த ஒரு கயவன் எம்பத்தியொரு வயசென்ன நூறு வயசு ஆனாலும் உள்ளே அடைச்சு லாடம் கட்டுவதை விட்டுவிட்டு, அவனுக்கு சுகவீனம் என்று இரக்கப்படுகிறார்கள்.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
23-பிப்-202110:55:25 IST Report Abuse
Nellai tamilan வெளியில் வந்தவுடன் அந்த ஆள் அடுத்த கலவரத்தை துவங்க முயற்சி செய்வான். நீதிமன்றம் காதுகுடைந்து கொண்டு அரசிடம் பதில்மனு தாக்கல் செய்ய சொல்லும்.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
22-பிப்-202120:17:31 IST Report Abuse
MANIAN K வன்முறை தூண்ட வயது வரம்பில்லை தண்டனை அநுபவிக்க வயதாகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X