சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'லாஜிக்'கே இல்லை!

Added : பிப் 22, 2021
Share
Advertisement
'லாஜிக்'கே இல்லை!'சின்ன விஷயத்தைக் கூட, ஊதி பெரிதாக்குகின்றனர். இது நாகரிகமான அரசியலுக்கு நல்லது இல்லை' என, புலம்புகிறார், கேரள மாநில, பா.ஜ., தலைவர் சுரேந்திரன். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரதான எதிர்க்கட்சியாக, காங்கிரஸ் உள்ளது. விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தன் பலத்தை நிரூபித்து, ஆளும்

அக்கம் பக்கம்


'லாஜிக்'கே இல்லை!



'சின்ன விஷயத்தைக் கூட, ஊதி பெரிதாக்குகின்றனர். இது நாகரிகமான அரசியலுக்கு நல்லது இல்லை' என, புலம்புகிறார், கேரள மாநில, பா.ஜ., தலைவர் சுரேந்திரன். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரதான எதிர்க்கட்சியாக, காங்கிரஸ் உள்ளது. விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தன் பலத்தை நிரூபித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதில், பா.ஜ., தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், 'இடதுசாரி கட்சிகளுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. காங்கிரசை தோற்கடிக்க, இந்த கட்சிகள் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளன' என, காங்., தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தான், மாநிலம் முழுதும் உள்ள கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க, 'விஜய யாத்ரா' என்ற பெயரில், யாத்திரையை துவக்கியுள்ளார் சுரேந்திரன். இதை சரியாக பயன்படுத்திய காங்கிரஸ் கட்சியினர், 'முதல்வர் பினராயி விஜயன் பெயரில், யாத்திரை நடத்துகிறார். ஆளும் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது என்பது, இதன் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது' என, பற்ற வைத்தனர். இதைக்கேள்விப்பட்ட, சுரேந்திரன், 'விஜய என்றால், வெற்றி என்று அர்த்தம். இது தெரியாமல், எந்த, 'லாஜிக்'கும் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர்' என, கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X