சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை உலக நாட்டு வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவும் அமெரிக்காவும் தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. வர்த்தகப் போர் துவங்கி வைரஸ் தாக்கம்வரை 2019-20 ஆகிய ஆண்டுகளில் சீன-அமெரிக்க மோதல் நாளுக்குநாள் நீடித்து வந்தது. இதனை அடுத்து தற்போது சீன வெளியுறவுத் துறை ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது.

கலந்தாலோசனை கூட்டம் வேண்டும்
உலக வர்த்தக மேம்பாட்டுக்காக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா ஆகியவை கருத்து வேறுபாடுகளை களைந்து கலந்தாலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன கம்யூனிச அரசு தொடர்ந்து அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்னை, வர்த்தகப் போர் என நிகழ்த்திவரும் நிலையில் தற்போது அமெரிக்காவுடன் அணுக்கமாகச் செல்லும் சீனாவின் இந்த போக்கு ஆசிய நாடுகள் பலவற்றை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE