கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி மாலகோவில் முதல், எம்மேகவுண்டன்பாளையம் ரோடு, புதுப்பிக்காததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, கோதவாடி மாலகோவில் முதல் எம்மேகவுண்டன்பாளையம் பிரிவு வரையுள்ள தார் ரோடும், மால கோவில் முதல் செட்டியக்காபாளையம் வரையுள்ள ரோடும் பழுதடைந்துள்ளது.இந்த ரோடுகளை புதுபிக்க, மூன்று மாதங்களுக்கு முன் பணி துவங்கியது. முதல் கட்டமாக ரோடு தோண்டப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது.அதனை தொடர்ந்து, தார் ரோடு பணி துவங்கப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக இயக்கப்பட்ட 'கே 2' என்ற, அரசு பஸ் செட்டியக்காபாளையத்தில் இருந்து பட்டணம், தாமரைக்குளம் வழியாக கிணத்துக்கடவு சென்று வருகிறது.இதற்கு முன், செட்டியக்காபாளையத்தில் இருந்து எம்மேகவுண்டன்பாளையம் பிரிவு, மாலகோவில் வழியாக கோதவாடி வந்து, கிணத்துக்கடவு சென்று வந்தது. ரோடு பணி துவங்காமல் உள்ளதால், கோதவாடிக்கு பஸ் வருவதில்லை. மேலும், இவ்வழியாக சென்று வந்த லாரி, டெம்போ, கார் போன்ற வாகனங்களும், தாமரைக்குளம் வழியாக சுற்றி செல்கின்றன.இதனால், மக்கள் பாதிப்பதை தவிர்க்க, விரைவில் தார் ரோடு அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE