பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மண்வள அட்டை விவசாயிகளுக்கு பயிற்சி

Added : பிப் 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், தேசிய மண்வள அட்டை இயக்கத்தில், சில கிராமங்களை முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தளவாய்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்களில் வேளாண் துறையால் பயிற்சி
 தேசிய மண்வள அட்டை விவசாயிகளுக்கு பயிற்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், தேசிய மண்வள அட்டை இயக்கத்தில், சில கிராமங்களை முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தளவாய்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்களில் வேளாண் துறையால் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகள் கட்டாயம் விளைநிலத்தின் மண்ணை பரிசோதனை செய்து, மண்வள அட்டை பெற்று, அட்டையில் சிபாரிசு செய்துள்ள உரங்களை பயன்படுத்த வேண்டும். இதனால், இடுபொருள் வீணாவது குறையும்,'' என அறிவுறுத்தினார்.ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம், மண்ணில் உள்ள வளங்களையும், குறைகளையும் அறிந்து, அதற்கேற்ப பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட உரங்களை இடும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.பயிற்சியை ஒருங்கிணைத்த வேளாண் துணை அலுவலர் ரவிதினகர், உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், மண் வளத்தை மேம்படுத்துவது குறித்து தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X