சென்னை: அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த ரஜினி, வரும், 26ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, திடீரென அரசியலில் நுழையும் முடிவை கைவிட்டார். 'மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் சேர்வதாக இருந்தால், தாராளமாக போகலாம். போவதற்கு முன், மன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்' என, அறிவித்தார்.
தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே, கவனம் செலுத்தி வரும் ரஜினியை, சில தினங்களுக்கு முன், கமல் நேரில் சந்தித்தார்; இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்ததாக கூறப்பட்டது. அரசியல் குறித்த விஷயங்கள் பேசவில்லை என்று, கமல் கூறினார். இந்நிலையில், 26ம் தேதி, மன்ற நிர்வாகிகளையும், அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் களையும் சந்திக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இத்தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில், ரஜினி யாருக்கு ஆதரவு தரப்போகிறார்; அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற, எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE