பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : கற்றலை மேம்படுத்த கையேடு வினியோகம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
உடுமலை:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் கோடந்துாரில், நடந்தது.உடுமலை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்ப்பாட அடிப்படைத் திறன்களில் கற்றல் அடைவைப் பெறுவதில், மலைவாழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில்

உடுமலை:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மலைவாழ் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம் கோடந்துாரில், நடந்தது.உடுமலை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்ப்பாட அடிப்படைத் திறன்களில் கற்றல் அடைவைப் பெறுவதில், மலைவாழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் மாவட்ட அளவிலான கல்வியியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, கொரோனா பரவலால், பத்து மாதங்களாக, மலைவாழ் கிராம குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதை சீராக்கும் வகையில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மலைவாழ் குழந்தைகள் வசிக்கும் மலைப்பகுதிகளுக்கு நேரடியாகச்சென்று கற்றல் கையேடுகள், கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கும் கல்வி விழிப்புணர்வு முகாம் தளிஞ்சி மற்றும் கோடந்துாரில் நடைபெற்றது.முகாமில், பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், கையேடுகளை வழங்கி, மலைவாழ் குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்தும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு குறித்தும் பேசினார்.மாவட்டம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும், சரவணகுமார், பிரபாகர், குழந்தைகள், கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய கையேடுகளைப் பயன்படுத்தும் விதம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். பயிற்சி நிறுவனப் புள்ளியியல் அலுவலர் லிங்கசாமி பேசினார்.தளிஞ்சி மற்றும் கோடந்தூர் மலைவாழ் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள் முனியம்மாள், பக்ருதீன், ராஜலட்சுமி, லீலா கண்ணன், வனவர் கோபிநாத், வனக்காப்பாளர்கள் மனோகரன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X