வால்பாறை:வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீராமர் திருக்கோவில் மகாகும்பாபிேஷக விழா, வரும், 24ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை பக்தர்கள் நடுமலை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.விழாவில், இன்று காலை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், கலசஸ்தாபனம், முதற்கால வேள்வி பூஜை, பிம்ப சுத்தி, ஸ்ரீராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் மகாபிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், தீபாராதனை நடக்கிறது.விழாவில், நாளை, 24ம் தேதி காலை, 9:35 மணிக்கு மகாகும்பாபிேஷகம் நடக்கிறது. சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் ராம்பிரபு உட்பட பலர் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE