உடுமலை:வரும் 25 ல் துவங்க உள்ள இலவச ஆடை உற்பத்தி பயிற்சியில் இணைய, கிராமப்புற இளைஞர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், 1,250 கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, திருப்பூர் முதலிபாளையம் 'நிப்ட்- டீ' கல்லுாரிக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது.ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு, டெய்லர்; பட்டப்படிப்பு முடித்தோருக்கு, மெர்ச்சன்டைசர், உற்பத்தி மேற்பார்வையாளர்; பிளஸ் 2 படித்தோருக்கு, பேஷன் டிசைனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, புதியதாக நுாறு பேருக்கு, மூன்று பிரிவாக, வரும் 25ம் தேதி முதல் பயிற்சிகள் துவங்க உள்ளன. பயிற்சிகளில், கிராமப்புற இளைஞர்கள் இணையலாம். கல்வி சான்று, ஜாதி சான்று, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதற்கான சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 96774 95111 என்கிற எண்ணில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE