5,435 பேருக்கு 21,740 ஆடுகள் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5,435 பேருக்கு 21,740 ஆடுகள் வினியோகம்

Added : பிப் 22, 2021
Share
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில், 400 பயனாளிகளுக்கு, கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. தலா, 35 ஆயிரம் ரூபாய் வீதம், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. கோழி வழங்கும் திட்டத்தில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 25

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில், 400 பயனாளிகளுக்கு, கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. தலா, 35 ஆயிரம் ரூபாய் வீதம், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. கோழி வழங்கும் திட்டத்தில், 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 25 கோழிக்குஞ்சுகள், 1.04 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட உள்ளன. நான்கு ஆடுகள் வீதம், 5 ஆயிரத்து 435 பயனாளிகளுக்கு, ஆடுகள் வழங்கப்படுகிறது.நான்கு ஆடுகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய், கொட்டகை அமைக்க, 2,000, போக்குவரத்து உள்ளிட்ட செலவுக்கு, 450 என, 12 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்பில் ஆடு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், ஆடு வழங்கும் திட்டத்துக்கு, 6.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.--

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X