பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்கு பஞ்சமில்லை! ஆழியாறு அணை நீர்மட்டம் தொடர் சரிவு:கோடை காலத்தை சமாளிக்கும் கையிருப்பு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், அணையின் நீர் மட்டம் 98 அடிக்கு சரிந்துள்ளது. ஆனாலும், அணையில் இருக்கும் நீர் இருப்பை கொண்டு, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் சமாளிக்க முடியும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில், சேமிக்கப்படும் நீரை பயன்படுத்தி, பழைய, புதிய ஆயக்கட்டு, கேரளா நீர்
 குடிநீருக்கு பஞ்சமில்லை! ஆழியாறு அணை நீர்மட்டம் தொடர் சரிவு:கோடை காலத்தை சமாளிக்கும் கையிருப்பு

ஆனைமலை:ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால், அணையின் நீர் மட்டம் 98 அடிக்கு சரிந்துள்ளது. ஆனாலும், அணையில் இருக்கும் நீர் இருப்பை கொண்டு, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் சமாளிக்க முடியும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில், சேமிக்கப்படும் நீரை பயன்படுத்தி, பழைய, புதிய ஆயக்கட்டு, கேரளா நீர் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள், தெற்கில் 26 ஊராட்சிகள், ஆனைமலையில், 19 ஊராட்சிகள், கிணத்துக்கடவில், 34 ஊராட்சிகள், ஆழியாறு குடிநீரால் பயன்பெறுகின்றன. வேட்டைக்காரன்புதுார், ஆனைமலை, கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டங்களும், சமத்துார் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான, கம்பாலபட்டி குடிநீர் திட்டமும் உள்ளன.அதேபோன்று, பொள்ளாச்சி நகராட்சிக்கான குடிநீர் திட்டம், கிணத்துக்கடவு பேரூராட்சி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி, குனியமுத்துார் பகுதிகள் என, மொத்தம், 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆழியாறு அணையே முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.இந்நிலையில், ஆழியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஜன., துவக்கம் முதல் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. பிப்., துவக்கத்தில் அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள, 120 அடியில், 110 அடியாக இருந்தது. மெல்ல மெல்ல நீர் மட்டம் சரிந்து, நேற்று முன்தினம், 99.40 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி, 98.50 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. வினாடிக்கு, 192 கனஅடி நீர் வரத்தும், 818 கனஅடி வெளியேற்றம் இருந்தது.ஆண்டுதோறும் நீர் மட்டம் வெகுவாக குறையும் நேரத்தில், பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டு, மக்கள் குடிநீருக்காக அலைமோதுவதுடன், போராட்டங்கள் நடப்பது வழக்கம்.ஆனால், இந்தாண்டு அணையில் நீர் மட்டம் சரிந்தாலும், கோடை காலத்துக்கு போதிய அளவு நீர் உள்ளதென, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.அச்சம் கொள்ள வேண்டாம்!பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது:ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில், போதிய அளவு மழை பெய்துள்ளதால், 98 அடிக்கு மேல் நீர் மட்டம் உள்ளது. தற்போது, மழை பொழிவு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நீர் வரத்து உள்ளது.அணையின் நீர் இருப்பை கொண்டு, கோடை காலத்தில் மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியும். அதுமட்டுமின்றி, மே மாதம் வரையில், பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்க வேண்டிய பாசன நீரையும் வழங்க முடியும். குடிநீர் பஞ்சம் ஏற்படுமென மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X