பொள்ளாச்சி;'தினமலர்' செய்தி எதிரொலியாக, பள்ளி மாணவர்கள் நடைபயணத்தை தவிர்க்க, பனப்பட்டியில் இருந்து, வடசித்துாருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.பொள்ளாச்சி, பனப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், உயர்கல்விக்கு, 5 கி.மீ., துாரமுள்ள வடசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.கொரோனா பரவல் காரணமாக, பனப்பட்டியில் இருந்து வடசித்துாருக்கு, பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இச்சூழலில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.பஸ் இயக்காததால், பனப்பட்டியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.பள்ளிக்கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கு பின், நெகமம் - கோவை பஸ் உடனடியாக இயக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு, கோவையில் இருந்து பனப்பட்டி, வெள்ளாளபாளையம், மன்றாம்பாளையம் வழியாக, வடசித்துாருக்கு அரசு பஸ் வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE