மடத்துக்குளம்:ரயில்வே ஸ்டேஷன் பகுதியை 'குடி'மகன்கள் கூடாரமாக மாறி வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியை, தினசரி நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இங்கு போதிய கண்காணிப்பு இல்லாததால், இந்த இடத்தை பலர் திறந்தவெளி 'பாராக' பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'பிரதான கதவுக்கு அருகில், சிறிய வழி உள்ளது. அதில் உட்புகும் நபர்கள், அங்குள்ள பயணிகள் காத்திருக்கும் இருக்கை மற்றும் பிளாட்பாரம் ஆகிய இடங்களை திறந்தவெளி 'பாராக' பயன்படுத் துகின்றனர். இதனால், இரவில் ''குடி'மகன்கள் நடமாட்டம் அதிகரித்து, பாதுகாப்பு குறைவான பகுதியாக மாறி வருகிறது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE