பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பொக்லைன் வாகன உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியிலுள்ள, பொக்லைன் வாகன உரிமையாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய, மாநில அரசு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள, 500க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.* ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பொக்லைன் வாகனங்களை இயக்காமல், நிறுத்தம் செய்தனர்.* நெகமம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே, ரோட்டோரத்தில், 30 பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE