சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் குளறுபடியால் தள்ளுபடி 'மிஸ்சிங்'! பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகை

Added : பிப் 22, 2021
Share
Advertisement
உடுமலை:கூட்டுறவு கடனை செலுத்தி, மறுகடன் கேட்டு காத்திருந்த விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென, கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தின் பேரிலும், குறுகிய காலத்திலும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு, ஓராண்டு வரை வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடனை
 அதிகாரிகள் குளறுபடியால் தள்ளுபடி 'மிஸ்சிங்'! பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகை

உடுமலை:கூட்டுறவு கடனை செலுத்தி, மறுகடன் கேட்டு காத்திருந்த விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென, கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தின் பேரிலும், குறுகிய காலத்திலும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு, ஓராண்டு வரை வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. முறையாக கடனை செலுத்தும் விவசாயிகள், ஓராண்டு தேதிக்குள், வெளியே கடன் வாங்கி பயிர்க்கடனை செலுத்திவிடுகின்றனர்.அதன்பின், ஒரு வார இடைவெளியில், புதிய பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்து, 10 நாட்களுக்குள் கடன் பெற்று கொள்கின்றனர்.இந்தாண்டு, நவ., - டிச., மாதங்களிலும், ஜன., 4ம் தேதி வரையும், பயிர்க்கடன் பெற்றிருந்த விவசாயிகள், முழுத்தொகையை செலுத்தி, கடன் நிலுவையை சரிசெய்தனர். பிறகு, ஜன., முதல் வாரத்திலேயே, புதிய பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்தனர்.வழக்கமாக, 10 நாட்களுக்குள் கடன் வழங்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசு வினியோகம் செய்வதால், கடன் வழங்க இயலாது என, கூட்டுறவு சங்கங்கள் இழுத்தடிப்பு செய்தன. இதனால், பல விவசாயிகள், பயிர்க்கடன் பெற முடியவில்லை; வெளியே வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த இயலவில்லை.தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், முறையாக கடன் தவணை செலுத்திய விவசாயிகளுக்கு, எவ்வித பயனும் இல்லாமல் போய்விட்டது. எனவே, 2020ம் ஆண்டு பயிர்க்கடன் பெற்று கடனை கட்டி புதுப்பிக்க முடியாதவர்களுக்கும், 2021 ஜன., 5 வரை கடனை புதுப்பித்தவர்களுக்கும், அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள், தாங்கள் பெற்ற கடன் தொகை, செலுத்திய கடன் ரசீது மற்றும் புதுப்பிக்க வழங்கிய விண்ணப்ப நகலுடன், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, அரசுக்கு பரிந்துரைக்க வலியுறுத்தினர்.விவசாயிகள் சங்கத்தலைவர் மதுசூதனன், செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலாளர் பாலதண்டபாணி, ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் கூறியதாவது: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், தமிழக அரசின் வட்டி சலுகையை கருத்தில் கொண்டு, வெளியில் கூடுதல் வட்டிக்கு பணம் கடன் வாங்கி, கூட்டுறவு சங்கங்களில் செலுத்தினோம். ஜன., மாதம் முதல் வாரத்திலேயே, வழக்கமாக கடன் வாங்குவோம்; இந்தாண்டு முறையாக விண்ணப்பித்தும், கடன் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர்.கூட்டுறவு சங்கத்தினர், சரியாக கடன் வழங்கியிருந்தால், ஏராளமான விவசாயிகள் பயன்பெற்றிருப்பர். எனவே, கடனை முறையாக செலுத்திய விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை வழங்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X