உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், 157 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, இரு தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 737 ஆக அதிகரித்துள்ளது.தேர்தல் கமிஷன், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஜன., 20ம் தேதி, வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு, ஓட்டுச்சாவடிக்கு, தலா, 1,500 வாக்காளர்கள் என இருந்ததை, 1,050க்கு மிகாமல் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து, தேர்தல் அதிகாரிகள், துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு, வரைவு துணை ஓட்டுச்சாவடி பட்டியல், வரைபடம், வாக்காளர் பட்டியல் பிரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.உடுமலை தொகுதியில், ஏற்கெனவே, 293 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது, 87 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அதே வளாகத்தில், 73 ஓட்டுச்சாவடிகளும், வேறு பகுதியில், 14 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.மடத்துக்குளம் தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில், புதிதாக 70 துணை ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 66 ஓட்டுச்சாவடிகள் அதே மையத்திலும், 4 ஓட்டுச்சாவடிகள் வேறு பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.வரைவு ஓட்டுச்சாவடிகளின் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,' சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியல், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE