புதுடில்லி :'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், பா.ஜ., - எம்.பி., சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று, 'நோட்டீஸ்' அனுப்பியது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த, 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
குற்றஞ்சாட்டினார்
மொத்தம், 90.25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா, ராகுல், காங்., மூத்த தலைவர்கள் ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் வோரா உள்ளிட்ட ஏழு பேர் மீது, பா.ஜ., - எம்.பி.,யும்,
மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக, டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரவும், சாட்சியங்களை முன்வைக்கவும் அனுமதிக்கும்படி, டில்லி நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, கடந்த, 11ம் தேதி, டில்லி நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
'
நோட்டீஸ்'
இம்மனு, நீதிபதி சுரேஷ் கெய்ட் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாமியின் மனு தொடர்பாக, சோனியா, ராகுல் உள்ளிட்டோர், ஏப்., 12க்குள் பதில் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE