சென்னை : அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:அ.ம.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில், நாளை மறுதினம் காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தில், 10 இடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இணைத்து, கூட்டம் நடக்கும்.இக்கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ளலாம்.இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE