ஆட்சி அமைக்குமாறு ரங்கசாமிக்கு அழைப்பு?

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை அடுத்து, அதிக எம்.எல்.ஏ.,க்கள் பலத்துடன் உள்ள என்.ஆர்.காங்., ரங்கசாமியை, ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களாக, அதிரடி திருப்பங்கள் நடந்த வந்து சூழலில், தேர்தல் தேதி அறிவிப்பு, அரசியல் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.புதுச்சேரியில், 2016ல்
புதுச்சேரி, நாராயணசாமி, ரங்கசாமி, நாராயணசாமி ,

புதுச்சேரி: புதுச்சேரியில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை அடுத்து, அதிக எம்.எல்.ஏ.,க்கள் பலத்துடன் உள்ள என்.ஆர்.காங்., ரங்கசாமியை, ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களாக, அதிரடி திருப்பங்கள் நடந்த வந்து சூழலில், தேர்தல் தேதி அறிவிப்பு, அரசியல் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.


புதுச்சேரியில், 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 15 எம்.எல்.ஏ.,க்களுடன் காங்., ஆட்சி அமைத்தது. தி.மு.க., 3, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., ஆதரவுடன் ஆட்சி நடந்து வந்தது. நாராயணசாமி முதல்வராக இருந்தார்.


கடந்தாண்டு, காங்., - எம்.எல்.ஏ., ஒருவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அமைச்சர்கள் இருவர், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், காங்., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 10 ஆக சரிந்தது. இதையடுத்து, 'சட்டசபையில் நேற்று, காங்., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, முதல்வர் நாராயணசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த வாரம் உத்தரவிட்டார்.


அனைவரும் ஆஜர்சட்டசபை கூடுவதற்கு முதல் நாளன்று, காங்., கட்சியை சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.,வும், கூட்டணி கட்சியான தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரும், தங்களது பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனால், சட்டசபையில் காங்., பலம், 9 ஆகவும், கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் பலம், இரண்டாகவும் குறைந்தது.

புதுச்சேரி சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம், 12; எதிர்க்கட்சிகளின் பலம், 14 என்ற பரபரப்பான சூழ்நிலையில், சட்டசபை நேற்று காலை, 10:05 மணிக்கு கூடியது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, இருதரப்பிலும் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சபைக்கு வந்திருந்தனர்.
சாதனை பட்டியல்


'என் தலைமையிலான அமைச்சரவை மீது, சட்டசபை முழு நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். அப்போது, காங்., ஆட்சியின் சாதனைகளையும், செயல்படுத்திய திட்டங்களையும் பட்டியலிட்டார். மத்திய பா.ஜ., அரசு மற்றும் கவர்னராக இருந்த கிரண்பேடியின் செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும், 1:௧௦ மணி நேரம் பேசிவிட்டு அமர்ந்தார்.


ஓட்டுரிமை உள்ளதா?அப்போது, அரசு கொறடா அனந்தராமன் எழுந்து, 'நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை உண்டா?' என, கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ளதை சுட்டிக் காட்டிய அனந்தராமன், 'நியமன எம்.எல்.ஏ.,க்கள், தற்போது ஓட்டு போடலாமா என்பது குறித்து, சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.


தீர்மானம் தோல்வி'நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே காரசார வாக்குவாதம் நிகழ்ந்தது. தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, சபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 14 பேர் மட்டுமே இருந்தனர். சபாநாயகர் சிவக்கொழுந்து பேசும்போது, ''முதல்வர் முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது,'' என, அறிவித்தார்.


அமைச்சரவை ராஜினாமாசபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்., மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் மாளிகைக்கு விரைந்தனர். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி வழங்கி விட்டு புறப்பட்டார்.


நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது குறித்து, சபாநாயகரிடம் அறிக்கை பெறுவது, அமைச்சரவை ராஜினாமாவை ஏற்று, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவது, அனைத்து விபரங்களையும் தொகுத்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற பணிகளில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


ரங்கசாமிக்கு அழைப்பு?


காங்கிரசுக்கு அடுத்தபடியாக, அதிக எம்.எல்.ஏ.,க்கள், என்.ஆர்.காங்கிரஸ் வசம் உள்ளது. எனவே, அக்கட்சி தலைவர் ரங்கசாமியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுக்கலாம்.

சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகும் சூழல் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். இதனால், ஆட்சி அமைத்தாலும், புதிதாக நலத் திட்ட உதவிகளை அறிவிக்க முடியாது.
எனவே, அதிகாரம் இல்லாத காபந்து அரசு போலவே செயல்பட முடியும் என்பதால், ஆட்சி அமைப்பதற்கு ரங்கசாமி ஆர்வம் காட்டவில்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த சூட்டோடு சூடாக, கூட்டணி ஆட்சியை அமைத்தால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு விடும் என, பா.ஜ.,வும் தயக்கம் காட்டுகிறது.


எனவே, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் வாய்ப்புகளே பிரகாசமாகி உள்ளன. இதனால், கவர்னரின் நேரடி மேற்பார்வையில், புதுச்சேரி அரசு நிர்வாகம் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும்.


சபாநாயகர் மீது நாராயணசாமி புகார்கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்த பின், நாராயணசாமி அளித்த பேட்டி:
சட்டசபையில், அரசு கொறடா அனந்தராமன், 'நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை இல்லை; அதனால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க உரிமை இல்லை' என்றார். அதற்கு, சபாநாயகர் பதில் கூறாததால், நாங்கள் வெளிநடப்பு செய்தோம். நாங்கள் வெளிநடப்பு செய்த பின், நான் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்து விட்டதாக, சபாநாயகர் அறிவித்தார். சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தீர்மானத்தில் பேசிய பின், தீர்மானத்தின் மீது சபாநாயகர் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.

எவ்வளவு பேர் ஓட்டளித்தனர் என, அறிவிக்க வேண்டும். அதை பதிவு செய்த பிறகே, தீர்மானம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, முதல்வரின் தீர்மானம் தோல்வி அடைந்து விட்டது, மெஜாரிட்டி இழந்து விட்டது என, கூறியுள்ளார். ஓட்டெடுப்பு நடத்தாமல் எப்படி மெஜாரிட்டி இழந்து விட்டது என, கூற முடியும்? இது, சட்ட பிரச்னை. இதுதொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202111:04:54 IST Report Abuse
Malick Raja ஆடும் வரை ஆட்டம் .. ஆட்டம் முடிந்தபின் ஓட்டம் . இது அணைத்து கட்சிக்கும் பொருந்தும் .. ஒரு கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வரும் வந்தே தீரும் .
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202111:04:54 IST Report Abuse
Malick Raja ஆடும் வரை ஆட்டம் .. ஆட்டம் முடிந்தபின் ஓட்டம் . இது அணைத்து கட்சிக்கும் பொருந்தும் .. ஒரு கட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வரும் வந்தே தீரும் .
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
23-பிப்-202120:19:12 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. நேர்மையான ஆட்சி வேணும் என்றால் பிஜேபி க்கு வோட்டு போடுங்கள் , முதல்ல நேர்மையான முறையில் ஆட்சியை தேர்தலில் வேண்டு பிடிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X