பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் 'வெப் கேமரா' பொருத்த முடிவு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், 40 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான, அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில், 67 ஆயிரம் ஒட்டுச் சாவடிகள் உள்ளன.கொரோனா காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, மேலும், 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்க

சென்னை : தமிழகத்தில், 40 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான, அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில், 67 ஆயிரம் ஒட்டுச் சாவடிகள் உள்ளன.கொரோனா காரணமாக, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, மேலும், 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்க வாய்ப்புள்ளது.மொத்தம் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், தடையின்றி இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும், 40 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவை வெப் கேமரா வாயிலாக இணையத்தில் ஒளிபரப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ஓட்டுப்பதிவு மற்றும் ஒட்டு எண்ணிக்கையை, வெப் கேமரா வழியே ஒளிபரப்ப, தனியார் நிறுவனங்களை நிறுத்த முடிவு செய்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதேபோல, வெப் கேமரா பொருத்த இயலாத ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவு, 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ளவும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு போன்றவை, வாகன சோதனை நடத்தும் போது, அவற்றை, வீடியோ எடுக்கவும், தேர்தல் கமிஷன் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதேபோல, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும், அனைத்து வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தேர்தல் கமிஷன் முடிவு செய்து, பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X