அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீடுகளில் விளக்கேற்றி உறுதிமொழி அ.தி.மு.க.,வினருக்கு வேண்டுகோள்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : 'ஜெயலலிதா பிறந்த நாளான நாளை மாலை, 6:00 மணிக்கு, வீடுகளில் தீபம் ஏற்றி, மக்களையும், மக்களுக்கான அ.தி.மு.க.,வையும் காப்பேன்' என, உறுதிமொழி எடுக்கும்படி, கட்சியினருக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. தொண்டர்களுக்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் எழுதியுள்ள கடிதம்:ஜெ., மண்ணுலகை விட்டு பிரிந்திருந்தாலும், அவரது புனித ஆன்மா,

சென்னை : 'ஜெயலலிதா பிறந்த நாளான நாளை மாலை, 6:00 மணிக்கு, வீடுகளில் தீபம் ஏற்றி, மக்களையும், மக்களுக்கான அ.தி.மு.க.,வையும் காப்பேன்' என, உறுதிமொழி எடுக்கும்படி, கட்சியினருக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.

தொண்டர்களுக்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் எழுதியுள்ள கடிதம்:ஜெ., மண்ணுலகை விட்டு பிரிந்திருந்தாலும், அவரது புனித ஆன்மா, நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்து கொண்டிருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை.அந்த நம்பிக்கையில் இருந்து தான், எப்பேர்ப்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல், அதை எதிர்கொள்ளும் துணிச்சலை, நாம் பெறுகிறோம்.இரண்டு மாதங்களில், நாம் மீண்டும் ஒரு பரிட்சையை சந்திக்க உள்ளோம்.

இதில், நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும், நம் பக்கம் உள்ளனர். இருப்பினும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்து, எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற, தீய எண்ணத்தோடு செயல்படத் துவங்கி உள்ளனர். அந்த மக்கள் விரோதிகளுக்கு, மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை, நாம் கற்பிக்க வேண்டும்.பிப்., 24 ஜெ., பிறந்த நாள். அன்று அனைவரும், 'என் இல்லம் அம்மாவின் இல்லம்' என, உளமார நினைத்து, உங்கள் வீடுகளில், மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து, ஜெ.,வின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்.

'உயிர் மூச்சு உள்ளவரை, ஜெ., வழியில் மக்களையும், மக்களுக்கான அ.தி.மு.க.,வையும் காப்பேன். இது, அம்மா மீது ஆணை' என, அனைவரும் உறுதிமொழி ஏற்கவும். வரும் தேர்தலிலும் ஜெயித்து, எதிரிகளை வீழ்த்தி, கோட்டையில், நம் கொடியை உயர பறக்க செய்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X