அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுதும்,தி.மு.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலம் முன், சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் சேகர்பாபு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர்

சென்னை : பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுதும்,தி.மு.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, சென்னை கலெக்டர் அலுவலம் முன், சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் சேகர்பாபு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை, திருவொற்றியூர், பெரியார் நகரில், சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, துணை பொதுச் செயலர் ஆ.ராசா எம்.பி., முன்னிலை வகித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்; தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,தனசேகரன், மணிமாறன், முத்துவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை மேற்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் சிற்றரசு, மயிலை வேலு ஆகியோர் தலைமை வகித்தனர். தயாநிதி மாறன் எம்.பி., முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக, தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.விலையை குறையுங்கஸ்டாலினின் நேற்றைய அறிக்கை:பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள பா.ஜ., அரசு, வரியை குறைத்து, லிட்டருக்கு, 5 ரூபாய் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணியாக இருக்கும் முதல்வர் இ.பிஎஸ்., தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம்தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தை பட்டப்பகலில் பச்சை படுகொலை செய்யும், படுபாதகச் செயலலையே லட்சியமாகக் கொண்ட மத்திய அரசு, மீண்டும் அதை புதுச்சேரியில் அரங்கேற்றி உள்ளது.பா.ஜ.,வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் சபையில் எடுத்துரைத்து, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி.

புதுச்சேரியில் தேர்தலை தள்ளி வைத்து, மறைமுக ஆட்சி நடத்த முயன்றால், அதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில், தி.மு.க., துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தி.மு.க.,விலிருந்து எம்.எல்.ஏ., நீக்கம்தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை:புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடேசன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X