அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல், ஸ்டாலினுக்கு நடிகை பதிலடி

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : 'பிரதமரை சந்திக்க முடியவில்லை என, பொய் பேசும் கமல், தமிழக முதல்வரை சந்திக்காதது ஏன்' என, நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது, 'டுவிட்டர்' பதிவு: பிரதமரை சந்திக்க பலமுறை நேரம் கேட்டேன்; தரவில்லை என, பொய் பேசும் கமலே, இதுவரை தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக, தமிழக முதல்வரை சந்தித்து, கோரிக்கை வைக்க ஏன் முயலவில்லை? பொய்

சென்னை : 'பிரதமரை சந்திக்க முடியவில்லை என, பொய் பேசும் கமல், தமிழக முதல்வரை சந்திக்காதது ஏன்' என, நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது, 'டுவிட்டர்' பதிவு: பிரதமரை சந்திக்க பலமுறை நேரம் கேட்டேன்; தரவில்லை என, பொய் பேசும் கமலே, இதுவரை தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக, தமிழக முதல்வரை சந்தித்து, கோரிக்கை வைக்க ஏன் முயலவில்லை? பொய் பேச இது, சினிமா அல்ல அரசியல் தி.மு.க.,விடம் இருந்து, 25 கோடி ரூபாயை தேர்தல் செலவுக்கு பெற்றது வெட்ட வெளிச்சமான பின், 'சொந்த செலவில் தேர்தல் செலவு செய்வோம்' என, பேசும் கம்யூனிஸ்ட்களே... தகரம் கண்டுபிடிக்கும் முன், உண்டியல் கண்டுபிடித்த நீங்கள், எந்த காலத்தில் சொந்த பணத்தில் அரசியல் செய்தீர்கள்..

. புதுச்சேரியில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ராஜினாமா செய்ததை, 'ஜனநாயகம் காக்க நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார்' என, பேசும் ஸ்டாலின் அவர்களே... உங்கள் தந்தையை நள்ளிரவில் கைது செய்தபோது, இரவோடு இரவாக, நீங்களும், உங்கள் மகனும், தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள். உங்கள் தந்தையை காத்தது பா.ஜ., அரசு. கோமாவில் இருந்த உங்கள் மாமா மாறனை, இறக்கும் வரை மத்திய அமைச்சராகவே பாதுகாத்தது பா.ஜ., அரசு தான்.

அடக்கம் முடிந்த அடுத்த நொடியே, நன்றி இல்லாமல் துரோகம் செய்தீர்கள். ஈழம் துவங்கி, தமிழகம் வரை தமிழர்களுக்கு தொடர் துரோகம் செய்து வரும் நீங்கள், ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசுவது வேடிக்கையானது.இவ்வாறு, காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X