சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாசின் நேற்றைய அறிக்கை:தமிழக வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி இறுதியில், விழுப்புரம், கடலுார் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெய்த மழை, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக, விவசாயிகளுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் அரும்பாடுபட்டு, அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள், எதிர்பாராத மழையில் சிக்கி சேதம் அடைந்துள்ளன.தமிழக அரசின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே, கொள்முதல் செய்யப்படும். ஆனாலும், விவசாயிகளின் நலன் கருதி, இப்போது, 20 சதவீதம் வரை, ஈரப்பதம் உள்ள நெல், கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி, நெல் கொள்முதல் செய்யப்பட்டால், உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும்.
எனவே, தமிழக அரசு, உடனே மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி, நெல்லை கொள்முதல் செய்ய, சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதன்படி, மழையில் நனைந்து சேதமடைந்த, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்களை, தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE