அரசியல் செய்தி

தமிழ்நாடு

மந்தரவாதி இல்லை; செயல்வாதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 22, 2021 | கருத்துகள் (15+ 13)
Share
Advertisement
ஆத்துார் :''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்வது போல் நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, செல்லியம்பாளையத்தில் நேற்று, அ.தி.மு.க., மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக திட்டங்களை
Edappadi Palanisamy, MK Stalin, EPS, Stalin, AMDK, DMK,  மந்தரவாதி, செயல்வாதி, ஸ்டாலின், முதல்வர், பதிலடி

ஆத்துார் :''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சொல்வது போல் நான் ஒன்றும் மந்திரவாதி இல்லை. தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, செல்லியம்பாளையத்தில் நேற்று, அ.தி.மு.க., மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களின் சூழ்நிலையை அறிந்து, பொங்கல் பரிசு போன்ற திட்டங்களை அறிவித்தோம்.


கட்டப்பஞ்சாயத்து


இதை கூட தடுக்க ஸ்டாலின் முயற்சித்தார். மனுக்களை வாங்குகிறோம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.ஸ்டாலினின் சாயம் தற்போது வெளுத்து விட்டது; மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாதவர் ஸ்டாலின். அவர், நாட்டில் என்ன நடக்குது என்பதே தெரியாமல் இருக்கிறார்.


குடிசையில் பிறக்கும் குழந்தைகளும் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் கூறுவது போல், நான் மந்திரவாதியாக இருந்திருந்தால், அவர் பேசியிருக்கவே மாட்டார். நான் மந்திரவாதி அல்ல; தமிழக மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும் செயல்வாதி நான். தப்பு செய்தவரை தட்டிக்கேட்டால் தான் தலைவன்; தட்டிக் கேட்காமல், கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழகத்திற்கு தேவையா என, மக்கள் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


இன்னும் நிறைய அறிவிப்பு


நாமக்கல் மாவட்டம், கபிலர்மலையில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. நீர் மேலாண்மை திட்டத்திற்காக, தமிழகம் தேசிய விருது பெற்றுள்ளது.


உள்ளாட்சி துறையில், 143 விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். கொரோனா காலம், கடந்த தைப்பொங்கல், இந்தாண்டு பொங்கல் என மக்களுக்கு, 4,500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் நிறைய அறிவிப்புகள் வெளிவரும். பொதுமக்களின் மனம் குளிர, மனம் மகிழ அற்புதமான அறிவிப்புகள் வெளிவரும்.இவ்வாறு, அவர் பேசினார்.


திருப்பதி கோவில் அடிக்கல்
திருமலை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், அஜிஸ் நகர் ரவுண்டானா அருகில், தனக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலத்தை, தேவஸ்தானத்துக்கு தானமாக வழங்கியுள்ளார். இங்கு, ஏழுலையாமன் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.

முதல்வர் இ.பி.எஸ்., காலை, 10:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு நடந்த யாகசாலை பூஜையிலும் பங்கேற்றார்.தொடர்ந்து, ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்து. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vsraj - COIMBATORE,இந்தியா
23-பிப்-202119:34:24 IST Report Abuse
vsraj பொதுவாக பார்க்கும்போது மக்களை கவர்ந்துவிட்டார் EPS.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
23-பிப்-202116:42:41 IST Report Abuse
periasamy நீங்கள் எப்படி நாலு பாய்ச்சலில் தவழ்ந்து எப்படி உழைத்து இந்த முதல்வர் பதவியை பெற்றாய் அதைக் காப்பாற்ற மத்திய பாஜாகாவிடம் தமிழக உரிமை அனைத்தையும் இழந்து உங்கள் பதவியை காப்பாற்றினாய் எல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள் பழனிச்சாமி அவர்களே இனி மக்களின் தீர்ப்புக்கு காக காத்திருக்கும் குற்றவாளிதான் நீங்கள்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202111:13:46 IST Report Abuse
Malick Rajaகூனி குறுகி ..குந்தி தவழ்ந்து படுத்து ஊர்ந்து உழைத்த காணொளி படமாக திரையிடப்பட இருக்கிறது .. கவலைப்படவேண்டாம் பழனிசாமி அவர்களே .. ஜூன் மாதத்தில் முன்னாள் முதல்வர் என்று கொஞ்சகாலம் சொல்வார்கள்...
Rate this:
sankar - Nellai,இந்தியா
26-பிப்-202121:32:02 IST Report Abuse
sankarஉங்களை எல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-பிப்-202113:08:50 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     தமிழகத்துக்கான உரிமையைப் பறிகொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறிபோனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறிபோனது. புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது. மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதிவரத்து குறைந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால், தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
23-பிப்-202114:43:31 IST Report Abuse
Srinivasஅதற்காகத்தான் இந்த இரண்டு அடிமைகொள்ளைக்கூட்டத்தை விரட்ட தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர். பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலையை ஏற்றி மக்கள் வயிற்றில் அடிக்கிறானுங்க..கொஞ்சம்கூட இரக்கமில்லாத கொடூர கும்பல்கள்.......
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-202111:22:05 IST Report Abuse
Malick Rajaகொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை ..தமிழக மின்வாரியத்தில் வடமாநிலத்தினர் பணிபுரிய சட்டம் இயற்றியது .. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் இந்தி மொழி பேசுபவர்களை பணியமர்த்தியது . கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாமலிருந்தால் இந்நேரம் இந்தி தெரிந்தால் மட்டுமே தமிழகத்தில் வேலை என்ற நிலையம் . ஏன் ஆட்சி மொழியாக கூட ஆகியிருக்கும் .. இப்போது தமிழகம் காக்கப்பட இவர்களை துடைத்தெறிய மக்கள் விளைவது வெளிப்படை .. இனி இவர்கள் தொடர்ந்தால் ஒரே நாடாகி காடாகவே வாய்ப்பு ..மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதும் .மென்மேலும் விலை வளர்ச்சி பெறுவதும் இவர்களின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X