அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் இருக்கைக்காக நிதி அரசிடம் கேட்கிறார் கமல்

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : 'கனடாவில் உள்ள, டொரண்டோ பல்கலையில், தமிழ் இருக்கைக்காக, 3.2 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு தர வேண்டும்' என, கமல் வேண்டுகோள் விடுத்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:மொழி வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சிகளில், பல்கலைகளில் இருக்கை அமைத்து ஆய்வு மேற்கொள்வது முக்கியம். தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி வழங்கி, ஹார்வர்டு பல்கலையில் இருக்கை
 தமிழ் இருக்கைக்காக நிதி  அரசிடம் கேட்கிறார் கமல்

சென்னை : 'கனடாவில் உள்ள, டொரண்டோ பல்கலையில், தமிழ் இருக்கைக்காக, 3.2 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு தர வேண்டும்' என, கமல் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:மொழி வளர்ச்சிக்கு எடுக்கும் முயற்சிகளில், பல்கலைகளில் இருக்கை அமைத்து ஆய்வு மேற்கொள்வது முக்கியம். தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி வழங்கி, ஹார்வர்டு பல்கலையில் இருக்கை அமைத்தது.கனடாவிலும் மூன்றரை லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு, முதலிடத்தில் உள்ள, 193 ஆண்டுகள் பழமை வாய்ந்த டொரண்டோ பல்கலை, பல ஆண்டுகளாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது.அங்கு, தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சி வேகமாகியுள்ளது.

அதற்கு தேவையான வைப்பு நிதி, 30 லட்சம் டாலர்கள். அங்கு உள்ள தமிழ் மக்கள், 24.4 லட்சம் டாலர்கள் திரட்டி விட்டனர்.மீதம், இந்திய மதிப்பில், 3.2 கோடி ரூபாய் மட்டுமே தேவை. அதை தமிழக அரசு நிதியாக வழங்க வேண்டும்.அங்கு அமையும் தமிழ் இருக்கை, உலகின் பல தமிழ் ஆய்வுகளை, சுதந்திரமாக முன்னெடுக்கும் மையப் புள்ளியாகவும் செயல்படும் என்பதில் ஐயமில்லை.இதற்கு கிடைக்கும் வெற்றி, தமிழக அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-பிப்-202117:09:47 IST Report Abuse
Vijay D Ratnam கமல்ஹாசனின் கோரிக்கை நியாயமானது. கனடாவில் உள்ள, டொரண்டோ பல்கலையில், தமிழ் இருக்கைக்காக, 3.2 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்களின் கோரிக்கையாக ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும். பச்சை தமிழன் கோரிக்கையை பச்சை தமிழன் ஏற்க வேண்டும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-202116:55:59 IST Report Abuse
Endrum Indian கனடாவில் உள்ள, டொரண்டோ பல்கலையில், தமிழ் இருக்கைக்காக, 3.2 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு தர வேண்டும்' என, கமல் வேண்டுகோள். உண்மை என்ன ??? இந்த நிதி அங்கே போய் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சென்று அங்கிருந்து வேளாண் சட்டம் எதிர்ப்பு 88 ஆவது நாளாக நடக்கின்றதே அவர்களை சென்றடையும் அதர்க்க்கத்தான் இந்த நிதியை கேட்டது கிறித்துவ சங்க ஆதரவு கமல்.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
23-பிப்-202115:27:15 IST Report Abuse
Rajalakshmi ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை அமைக்க முயன்ற போதே அதனை கண்டித்தனர் திரு.ராஜிவ் மல்ஹோத்ரா , திரு.சிவா அய்யாதுரை போன்றோர். இந்த நடிகன் ஒரு பயங்கர முட்டாள் என சொன்னார் திரு.சிவா அய்யாதுரை அவர்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் நோக்கம் நல்லதல்ல. அனைத்து ஒரிஜினல் manus -ம் அவர்களது கையில் தடையின்றி accessible ஆகி விடும். சமீபத்தில் படித்தேன் தஞ்சை சரஸ்வதி மஹாலில் இருந்த அரிய சுவடிகள் பலவும் missing . யாரோ கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு யாருக்கோ அள்ளிக்கொடுத்து விட்டார். ஆரிய -திராவிட புனைசுருட்டு போதாதா ? அனைத்தும் ஏசு அல்லது தாமஸ் எழுதியது என்று சொல்ல முயற்சிப்பார்கள் . சிதைத்து இடைச்செருகல்கள் வரலாம். இந்த நடிகன் மிகவும் dubious . திரு. எடப்பாடி அவர்கள் இவனை அடக்கி வைக்க வேண்டும். தமிழன்டா டா..மிலன்டா என்ற வெறியை துவக்கி வைத்ததே மிஷனரிகள். அவர்களது சதியே இலங்கையில் நடந்த civil war .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X