பொது செய்தி

தமிழ்நாடு

செயல்பாட்டிற்கு வந்தது பூசாரி வாரிய இணையதளம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : முடங்கி கிடந்த பூசாரிகள்நலவாரிய இணைய தளம், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வாரியத்தில், புதிய உறுப்பினர்கள் சேரலாம். கிராம கோவில் பூசாரிகள் நலன் கருதி, 2007ல், நலவாரியம் துவக்கப்பட்டது. இது, அறநிலையத்துறை அமைச்சரை தலைவராகவும், கமிஷனரை செயலராகவும், ஒன்பது அலுவல் சாரா உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது.கடந்த, 2015ம் ஆண்டிற்கு பின், நலவாரியம் முடங்கியது. இதனால்,

சென்னை : முடங்கி கிடந்த பூசாரிகள்நலவாரிய இணைய தளம், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வாரியத்தில், புதிய உறுப்பினர்கள் சேரலாம். கிராம கோவில் பூசாரிகள் நலன் கருதி, 2007ல், நலவாரியம் துவக்கப்பட்டது.

இது, அறநிலையத்துறை அமைச்சரை தலைவராகவும், கமிஷனரை செயலராகவும், ஒன்பது அலுவல் சாரா உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது.கடந்த, 2015ம் ஆண்டிற்கு பின், நலவாரியம் முடங்கியது. இதனால், பூசாரிகள் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.நல வாரியத்தில், 60 ஆயிரம் பூசாரிகள் உறுப்பினராக இருந்தும், 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில், பூசாரிகள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை, ஆன்-லைன் வழியாக மேற்கொள்ள, நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால், முடங்கிக்கிடந்த பூசாரிகள் நலவாரிய இணையதளம், மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இம்முறை, பூசாரிகளே தன்னிச்சையாக பதிவு செய்து, உறுப்பினர்களாக வசதி உள்ளது.இந்த முறையில், போலியாக பூசாரிகள் உறுப்பினராகலாம் என்பதால், பழைய முறைப்படி ஆய்வு நடத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டிலேயே, உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பூசாரிகள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X