ராமநாதபுரம் : கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்ட அரசு பஸ்சை, 40 கி.மீ., துரத்தி, கண்டக்டர் பிடித்தார்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடிக்கு சென்ற அரசு பஸ், நேற்று மதியம், 1:00 மணிக்கு பரமக்குடி பஸ் ஸ்டாண்டை அடைந்தது. அங்கு பயணியரை இறக்கி விட்டு டிரைவர், கண்டக்டர் டீ அருந்தினர்.பின் கண்டக்டர், 'பாத்ரூம்' சென்ற நிலையில், டிரைவர் பஸ்சை எடுத்து சென்றார். ராமநாதபுரம் அருகே, அச்சுந்தன் வயல் சோதனை சாவடியை அடைந்த போது, 40 கி.மீ., 'டூ - வீலரில்' பின் தொடர்ந்து வந்த கண்டக்டர், பஸ்சை மடக்கினார். எதுவும் தெரியாத டிரைவரோ, 'என்னய்யா டூ - வீலரில் வந்து இறங்குகிறாய்' எனக் கேட்டார். இந்த காமெடியை, பயணியர் ரசித்து மகிழ்ந்தனர்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE