பொது செய்தி

தமிழ்நாடு

பதிவுத்துறை வருவாய் இலக்கில் மாற்றம்?

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, பத்திரங்களின் வருகை குறைந்ததால், பதிவுத்துறை வருவாய் இலக்கு திருத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 13 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் ஈட்டப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும், பதிவுத்துறை வருவாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020 - 21ம்

சென்னை : கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, பத்திரங்களின் வருகை குறைந்ததால், பதிவுத்துறை வருவாய் இலக்கு திருத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 13 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் ஈட்டப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும், பதிவுத்துறை வருவாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020 - 21ம் நிதியாண்டில், சில மாதங்கள், பத்திரப்பதிவு மிக குறைந்த அளவிலேயே இருந்தது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: பதிவுத்துறையில், 2018 - 19ல், 11 ஆயிரத்து, 512 கோடி வருவாய்; 2019 - 20ல், 13 ஆயிரத்து, 122 கோடி ரூபாய் வருவாய் இலக்கு எட்டப்பட்டது. இதையடுத்து, 2020 - 21ல், 14 ஆயிரத்து, 435 கோடி ரூபாய், வருவாய் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. ஊரடங்கு காரணமாக, சில மாதங்கள், பத்திரப்பதிவுகளின் வருகை குறைந்ததால், இந்த இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரி இறுதி நிலவரப்படி, 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தால், பத்திரங்கள் பதிவாவது குறையும். எனவே, தற்போதைய நிலவரப்படி, 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒட்டியே வருவாய் இருக்கும். அதற்கேற்ப வருவாய் இலக்கில் மாற்றம் செய்வது குறித்து, உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X