பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி கோவை வருகை கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை

Added : பிப் 22, 2021
Share
Advertisement
கோவை : பிரதமர் மோடி, நாளை மறுதினம் கோவை வருவதை அடுத்து, கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை மறுதினம் மதியம், 3:00 மணியளவில், தனி விமானத்தில், புதுச்சேரியில் இருந்து கோவை வருகிறார். புதிய திட்டங்கள்கோவை விமான நிலையத்தில் இருந்து, காரில், 'கொடிசியா' அரங்கு சென்று, புதிய திட்டங்களை

கோவை : பிரதமர் மோடி, நாளை மறுதினம் கோவை வருவதை அடுத்து, கூடுதல் டி.ஜி.பி., தலைமையில் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை மறுதினம் மதியம், 3:00 மணியளவில், தனி விமானத்தில், புதுச்சேரியில் இருந்து கோவை வருகிறார். புதிய திட்டங்கள்கோவை விமான நிலையத்தில் இருந்து, காரில், 'கொடிசியா' அரங்கு சென்று, புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து, கொடிசியா அரங்கு அருகே உள்ள, மைதானத்தில் நடக்கும் பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பேச உள்ளார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, காரில் விமான நிலையம் செல்பவர், தனி விமானத்தில் டில்லி செல்ல உள்ளார்.

பாதுகாப்பு தீவிரம் : பிரதமர் வருகையை முன்னிட்டு, கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா பகுதியில், 24 மணி நேர, துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்ய, தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அமேரேஷ் புஜாரி, கோவை வந்துள்ளார். நேற்று காலை, அவர் தலைமையில், உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பிரதமர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒத்திகை, மேடை பாதுகாப்பு பணி, பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது.பிரதமர் வருகையை முன்னிட்டு, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 3,000 போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர்.'மினி கன்ட்ரோல் ரூம்'பிரதமரின் இரு நிகழ்ச்சிகளும், கொடிசியா அரங்கு மற்றும் மைதானத்தில் நடப்பதால், அந்த பகுதி முழுதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

'கொடிசியா' செல்லும் நுழைவு பகுதியிலேயே, போலீசார், 'மினி கன்ட்ரோல் ரூம்' அமைத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, 24 மணி நேர, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பாதுகாப்பு பணிக்கு வரும் அனைத்து போலீசாரும், 'மினி கன்ட்ரோல் ரூமில்' பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X