செங்கோட்டை மீது ஏறிய இளைஞர் கைது

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி :குடியரசு தினத்தன்று, டில்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, செங்கோட்டையின் கோபுரத்தின் மீது ஏறிய, 29 வயது இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று,
செங்கோட்டை மீது ஏறிய இளைஞர் கைது

புதுடில்லி :குடியரசு தினத்தன்று, டில்லியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, செங்கோட்டையின் கோபுரத்தின் மீது ஏறிய, 29 வயது இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது வெடித்த கலவரத்தின் போது, டில்லி செங்கோட்டைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களை தடுத்த போலீசாரை, பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.


latest tamil news



டில்லியைச் சேர்ந்த மனிந்தர் சிங், 30, போலீசாரை நோக்கி வாளை சுழற்றினார். இந்த காட்சி, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இவரது கூட்டாளியான, ஜஸ்பிரீத் சிங், 29, செங்கோட்டை கோபுரத்தின் மீது ஏறிய காட்சிகளும், ஊடகங்களில் வெளியாகின.இந்நிலையில், மனிந்தர் சிங்கை, டில்லி போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். அவரது கூட்டாளியான ஜஸ்பிரீத் சிங், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-பிப்-202116:34:54 IST Report Abuse
Vijay D Ratnam இந்தியாவின் தலை சிறந்த மருத்துவமனையில் வைத்து தலை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும், இரண்டு கண்களையும் அகற்றிவிட்டு உயிரோடு விட்டு வைக்க வேண்டும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
23-பிப்-202116:33:13 IST Report Abuse
S.Ganesan இந்த இளைஞனை கைது செய்ததோடு நில்லாமல் இவனை தூண்டியவர்களையும் பிடித்து தண்டியுங்கள்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-202116:22:22 IST Report Abuse
Endrum Indian அதுக்கு இவ்வளவு நாளா???? தவறு கண்டேன் சுட்டேன் சட்டம் கொண்டு வாருங்கள் ஒவ்வொரு நாயும் முதலில் குறைப்பதை நிறுத்தும் தவறான வழியில் செல்வதை இந்த சட்டம் உடனே நிறுத்தும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X