தஞ்சாவூர் : பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்துஉள்ளதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில், பல கூட்டுறவு சங்க செயலர்கள், தலைவர்கள், விவசாய நிலம் இல்லாத நபர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில், போலியாக ஆவணங்களை தயார் செய்து, முறைகேடாக, கடன் பெற்று, தள்ளுபடி பெற்றுள்ளதாக, விவசாயிகள், புகார் கூறி வருகின்றனர்.பெருமாக்கநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்தாண்டு, 73 பேர் கடன் பெற்றுள்ளனர்.
'இதில், போலி ஆவணங்களை கொடுத்து, 28 பேர், 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். 'உரிய விசாரணை நடத்த வேண்டும்' என வலியுறுத்தி, நேற்று, தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை, நெடாரில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுக்கு பின், கலைந்து சென்றனர்.'தமிழகத்தில், பல்வேறு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இதுபோன்று முறைகேடு நடந்துள்ளது. அரசு உரிய விசாரணை நடத்தி, பயனாளிகளின் பெயரை இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE