கோவை:பெரியகடை வீதி, தபால்நிலையத்தில் சிறப்பு ஆதார் முகாம் நேற்று துவங்கியது. காலை, 10:00 முதல், மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கும்.முகாமில், புதிதாக ஆதார் பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம். ஆதாரில் திருத்தங்கள் செய்ய, 50 ரூபாய் செலுத்த வேண்டும். திருத்தங்கள் செய்ய, ஆதார் மற்றும் ஆவணங்களின் அசலை கொண்டு வருவது கட்டாயம்.பெயர் மாற்றம் செய்ய, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.முகவரி மாற்றம் செய்ய, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் மற்றும் பிறந்த தேதியை மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பத்து அல்லது 12ம் வகுப்பு மார்க் ஷீட் மற்றும் மொபைல் போன் எண்ணை மாற்ற, ஆதாரை எடுத்து வர வேண்டும். வரும், 26ம் தேதி வரை முகாம் நடக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE