புதுக்கோட்டை : ''தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், அவர் கூறியதாவது:பிற மாநிலங்களில், கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. இதே நிலை தொடர, பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அரசு விதிமுறைகளை, பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அம்மா மினி கிளினிக்கில், டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்படவில்லை என்ற, ஸ்டாலின் கருத்து தவறானது. போர்க்கால அடிப்படையில், 2,000 டாக்டர்கள், தலா, 2,000 நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள், உயர் நீதிமன்ற அறிவுரைப்படி, நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE