பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் ரூ.13 கோடி வசூல்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட, 14.21 லட்சம் நபர்களிடம் இருந்து, 13 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது சுகாதார சட்டத்தின்படி, முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோர்கள் உள்ளிட்ட, கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்படும் நபர்களிடமிருந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை : தமிழகத்தில், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட, 14.21 லட்சம் நபர்களிடம் இருந்து, 13 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது சுகாதார சட்டத்தின்படி, முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோர்கள் உள்ளிட்ட, கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்படும் நபர்களிடமிருந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்ட, 14 லட்சத்து, 21 ஆயிரத்து, 350 நபர்களிடம் இருந்து, 13 கோடியே, ஐந்து லட்சத்து, 58 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 9 கோடி ரூபாய், தமிழக அரசின் கருவூலத்திற்கும், மீதமுள்ள தொகை, கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X