தஞ்சாவூர் : வறுமையின் பிடியில் சிக்கிய ஆதரவற்ற பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், அவரது மூன்று குழந்தைகள் நிர்கதியாய் நிற்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பாக்கியம் நகர் பகுதியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளி வீராசாமி. இவரது மனைவி உஷா, 40. தம்பதிக்கு பாலா, 9 அன்பு, 6 என இரு ஆண் குழந்தைகளும், தரணி, 4 என்ற பெண் குழந்தையும் உள்ளது.பல நாள் பட்டினிமூன்று குழந்தைகளும் அங்குள்ள, அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். வீராசாமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். வீட்டு வேலை செய்து, மூன்று குழந்தைகளையும் உஷா, காப்பாற்றி வந்தார்.கொரோனா காலத்தில், வறுமையால் குழந்தைகளுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்து, தான் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார்.
இதனால், தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மோசமான நிலையில், மெலிந்த தேகத்துடன், உயிர் பிழைக்க போராடி வருகிறார்.அப்பகுதி இளைஞர்கள், அவரை, பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், அவர் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். கோரிக்கைகுளுக்கோஸ் செலுத்தப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது.உறவினர்கள் யாரும் வராத நிலையில், உஷாவின், மூன்று குழந்தைகளும், கவனிப்பார் இன்றி நிர்கதியாய் நிற்கின்றனர்.
இது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டாமல், கட்சியினர் உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, டாக்டர் அன்பழகன் கூறியதாவது: சில மாதங்களாக, உஷா, முறையாக உணவு எடுத்துக்கொள்ளாத நிலையில், உணவுப்பாதை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்த போது, வயிற்று பகுதியில் சிறிய கட்டி தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அவரை தேடி, இதுவரை உறவினர்கள் யாரும் வரவில்லை. குழந்தைகள் ஆதரவு இல்லாமல் உள்ளனர். சில தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE