சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சித்தொட்டி திறந்து மீனவர்கள் போராட்டம்

Added : பிப் 22, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : 'இரட்டைமடி வலைக்கு, தடை விதிக்க கோரி, மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன், ஐந்து மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம்

தஞ்சாவூர் : 'இரட்டைமடி வலைக்கு, தடை விதிக்க கோரி, மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன், ஐந்து மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன், நேற்று கஞ்சித் தொட்டி திறந்து, போராட்டம் நடத்தினர். நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய, மீன்வளத்துறை நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடித்து வரும் விசைப் படகுகளை தடை செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர். பட்டுக்கோட்டை சப் - கலெக்டர் பாலச்சந்தர் பேச்சு நடத்தினார்.

'இரட்டை மடி வலைகள் பயன்படுத்துவதை, உடனடியாக தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்' என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X