மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெண்யானை ஜெயமால்யதா, 18, யானையை அதன் பாகன்கள் அடித்துள்ளனர்.இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.இதில் யானையை அடித்ததாக பாகன்கள் வினில்குமார், 46, சிவபிரசாத், 32, ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு வளர்ப்பு யானை பாதுகாப்பு சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE