பொது செய்தி

தமிழ்நாடு

பிசியோதெரபிஸ்ட்கள் 'டாக்டர்' என குறிப்பிட தடை அடுத்த மாதம் தலைமை செயலகம் முற்றுகை

Added : பிப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை : ''பிசியோதெரபிஸ்ட்கள் பெயருக்கு முன் 'டாக்டர்' போடக்கூடாது என்ற அரசாணையை கண்டித்து மார்ச் முதல் வாரம் தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளோம்'' என பிசியோதெரபிஸ்ட் அசோசியேஷன் மாநில பொது செயலாளர் எஸ்.சுரேஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழக அளவில் பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்று 20 ஆயிரம் பேர் உள்ளனர். 2008 அரசு உத்தரவில் பிசியோதெரபிஸ்ட்கள் 'டாக்டர்' என

சிவகங்கை : ''பிசியோதெரபிஸ்ட்கள் பெயருக்கு முன் 'டாக்டர்' போடக்கூடாது என்ற அரசாணையை கண்டித்து மார்ச் முதல் வாரம் தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளோம்'' என பிசியோதெரபிஸ்ட் அசோசியேஷன் மாநில பொது செயலாளர் எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக அளவில் பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்று 20 ஆயிரம் பேர் உள்ளனர். 2008 அரசு உத்தரவில் பிசியோதெரபிஸ்ட்கள் 'டாக்டர்' என போடக்கூடாது என்பதோடு ரத்தபரிசோதனை, எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்க கூடாது என குறிப்பிட்டது. ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, குஜராத் மாநில அரசாணைகளில் பிசியோதெரபிஸ்ட்கள் 'டாக்டர்' போடக்கூடாது என தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு மாநில பிசியோதெரபிஸ்ட் கவுன்சில் பெயர்களுக்கு முன் 'டாக்டர்' குறிப்பிடக்கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.

இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் பிசியோதெரபிஸ்ட்கள் மனு அளித்துள்ளோம். இதற்கு அரசு தீர்வு காணாவிட்டால் மார்ச் முதல் வாரத்தில் தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X