பி.எஸ்.ஜி., கல்லூரி அருகில் சிக்னல் கோளாறு: வாகனங்கள் அங்குமிங்கும் தாறுமாறு

Added : பிப் 22, 2021
Share
Advertisement
உடைந்த மின்கம்பத்தை மாற்றணும்பேரூர் ரோடு, செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி பஸ் ஸ்டாப், ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள, மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.-ரமேஷ், செல்வபுரம்.பயனற்ற நிழற்கூரைமாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, தொண்டாமுத்துார் ரோடு, சுண்டப்பாளையம் ஆரம்பப்பள்ளி அருகில் உள்ள,

உடைந்த மின்கம்பத்தை மாற்றணும்பேரூர் ரோடு, செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி பஸ் ஸ்டாப், ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள, மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.-ரமேஷ், செல்வபுரம்.

பயனற்ற நிழற்கூரைமாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, தொண்டாமுத்துார் ரோடு, சுண்டப்பாளையம் ஆரம்பப்பள்ளி அருகில் உள்ள, பயணிகள் நிழற்கூரை சிதிலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது; இதை சரிசெய்ய வேண்டும்.-ரகுபதி, சுண்டப்பாளையம்.

நடைபாதையில் குழிஅவிநாசி ரோடு, நவஇந்தியாவில் இருந்து, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி செல்லும், வழியில், நடைபாதையில் உள்ள குழியால், பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.- விஜயகுமார், ஆவாரம்பாளையம்.

மின் கம்பத்தை சீர்படுத்தணும்நியூசித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா மருத்துவமனை அருகில், சென்டர் மீடியனில் உள்ள, மின் கம்பம் சாய்ந்துள்ளது. இதை சீராக்க வேண்டும்.- வைசாலி, நியூசித்தாபுதுார்.

குப்பை தொட்டியை ஓரமா வைங்கதிருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், குப்பை தொட்டி, போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை சாலையோரம் வைக்க வேண்டும்.- ஜெயசந்திரன், ஆர்.வி.லே-அவுட்.

நாய் தொல்லைபோத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, குப்பை கிடங்கு அருகில், நாய் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் இவை வாகனங்களை துரத்துகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- ஆனந்தன், செட்டிபாளையம்.

கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்சூலுார், அப்பநாயக்கன்பட்டி புதுாருக்கு, ஒரே ஒரு பஸ் (வழித்தட எண்: 19 இ) மட்டுமே நீண்ட காலமாக இயக்கப்படுகிறது. மக்கள் பஸ் போக்குவரத்து இன்றி அவதிப்படுகின்றனர். இப்பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.- பிரசன்னா, அப்பநாயக்கன்பட்டி புதுார்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள, மின் கம்பங்கள், கடந்த சில மாதங்களாக எரிவதில்லை.- செல்வராஜ், அபிராமி நகர்.

குழாய் உடைப்பு குடிநீர் வீண்மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, சீனிவாசா நகரில் உள்ள, பள்ளி அருகே, குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது.- சிவகுமார்,

சீனிவாசா நகர்.

போக்குவரத்து நெரிசல்அவிநாசி ரோடு, பீளமேடு, பி.எஸ்.ஜி., டெக் அருகில் உள்ள, சிக்னல் பழுதால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனங்களை இயக்குகின்றனர்; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- கவுதமன், ராம் நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X