கார்த்தி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

Added : பிப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, 2 கோடி ரூபாய் பிணை தொகை செலுத்திவிட்டு, வெளிநாடு சென்று வர, உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக பதவி

புதுடில்லி : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, 2 கோடி ரூபாய் பிணை தொகை செலுத்திவிட்டு, வெளிநாடு சென்று வர, உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தமிழகத்தைச் சேர்ந்த, மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார்.விசாரணைஅப்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வழக்கில், சிதம்பரத்தின் மகனும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.,யுமான, கார்த்தி மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், அவர் மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக, கார்த்தியிடம் பலமுறை விசாரணை நடந்தது. அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 2019ல், 10 கோடி ரூபாய் பிணை தொகை செலுத்திவிட்டு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வர, கார்த்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில், தற்போது மீண்டும் வெளிநாடு செல்ல, அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அவர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். ''இந்த வழக்கில், கார்த்திக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. ''எம்.பி.,யாக இருக்கும் அவரை, வெளிநாடு செல்ல, 5 கோடி ரூபாய் பிணை தொகை செலுத்த சொல்வதில் நியாயமில்லை,'' என, அவர் வாதிட்டார்.
உத்தரவு : இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2 கோடி ரூபாய் பிணை தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்திவிட்டு, ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகள் சென்றுவர, கார்த்திக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.மேலும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார், எங்கு தங்க உள்ளார் உள்ளிட்ட விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X