பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை

Added : பிப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.10 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், 97.22 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், 1.50 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த 24 மணி நேரத்தில், 6.20 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் முடிவுகள் வாயிலாக, 14

புதுடில்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.10 கோடியாக உயர்ந்துள்ளது. இதில், 97.22 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், 1.50 லட்சம் பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த 24 மணி நேரத்தில், 6.20 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் முடிவுகள் வாயிலாக, 14 ஆயிரத்து, 199 பேரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களுடன், இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 10 லட்சத்து, 5,850 ஆக உயர்ந்துள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரு கோடியே, ஆறு லட்சத்து, 99 ஆயிரத்து, 410 பேர் குணமடைந்து உள்ளனர்;

மீட்பு விகிதம், 97.22 சதவீதமாக இருக்கிறது.கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 1.50 லட்சமாக உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், இவர்களின் விகிதம், 1.36 சதவீதம்.கடந்த சில நாட்களாக புதிய பாதிப்புகள் உயர்வால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 35 பேர், கேரளாவில், 15 பேர் உட்பட, 83 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால், கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 385 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.42 சதவீதம்.கொரோனா பலியில், 51 ஆயிரத்து, 788 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது.அடுத்ததாக தமிழகத்தில், 12 ஆயிரத்து, 460 பேரும்; கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 294 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X