ஜோலார்பேட்டை : அக்காவை அடித்துக் கொன்ற மாமனை, அரிவாளால் வெட்டி சாய்த்த மச்சானை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரியைச் சேர்ந்தவர், குமரன், 30; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி அஞ்சலி, 25; நேற்று காலை, 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்த ஒருவர், அஞ்சலியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.அஞ்சலி, கணவரிடம், தண்ணீர் தரும்படி கூறிவிட்டு குளிக்கச் சென்றார். தண்ணீர் எடுத்து வந்த குமரனை, அந்த நபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன், காலை, 8:00 மணிக்கு உயிரிழந்தார்.ஜோலார்பேட்டை போலீசார், குமரனை கொன்ற ராஜி, 25, என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது: கடந்த, 2004ல் குமரனுக்கும், அல்லேரியைச் சேர்ந்த ரம்யா, 25, என்பவருக்கும் திருமணமானது. வரதட்சணை பிரச்னையில், 2005ல் ரம்யாவை, குமரன் அடித்துக் கொன்றுள்ளார். இந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த குமரன், ஏலகிரி வந்து, அஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ரம்யாவின் கொலைக்கு பழி வாங்க, அவரது தம்பி ராஜி திட்டமிட்டார். ரம்யாவின் கொலை வழக்கில், இன்று, திருப்பத்துார் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் விபரத்தை அறிந்த ராஜி, நேற்று குமரன் வீட்டிற்கு சென்று, அவரை கொலை செய்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE