திருவனந்தபுரம் : கேரளாவில், முன்னாள் தடகள வீராங்கனையான, பி.டி.உஷாவை, பா.ஜ.,வில் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில், இரண்டு யுக்திகளை பயன்படுத்தி, மக்களின் ஆதரவை திரட்ட, பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சபரிமலை விவகாரத்தை வைத்து, ஹிந்து வாக்காளர்களையும், பிரபலங்களின் ஆதரவைப் பெற்று, நகர்ப்புற இளம் வாக்காளர்களையும் ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு முயற்சியாக, முன்னாள் தடகள வீராங்கனையான, பி.டி.உஷாவை, பா.ஜ.,வில் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்கான பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இவரை தவிர, திரைப்பட நட்சத்திரங்கள், கலாசாரம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் என சிலரை, தங்கள் பக்கம் வளைக்க, பா.ஜ., கட்சியினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக அறிவித்ததால், காங்., மற்றும் இடதுசாரி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.இந்நிலையில், வரும் வாரங்களில், உஷா போன்ற பிரபலங்கள் இணைந்தால், அவர்களுக்கு கலக்கம் ஏற்படும் என, கேரள மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE