ம.பி., தனியார் நிறுவனம் ரூ.450 கோடி வரி மோசடி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய பிரதேசத்தின் சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், 450 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளதை, வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். மத்திய பிரதேசத்தை மையமாக வைத்து செயல்படும், பிரபல சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்வதாக, வருமான வரித்துறை யினருக்கு தகவல்

புதுடில்லி : மத்திய பிரதேசத்தின் சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், 450 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளதை, வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர்.

மத்திய பிரதேசத்தை மையமாக வைத்து செயல்படும், பிரபல சோயா பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், வருமானத்தை கணக்கில் காட்டாமல் மோசடி செய்வதாக, வருமான வரித்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மத்திய பிரதேசத்தின் பெதுல் மற்றும் சத்னா, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் சோலாபுர் ஆகிய நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.இதில், 'லேப்டாப், பென் டிரைவ், ஹார்டு டிரைவ்' போன்ற, 'டிஜிட்டல்' ஆவண பதிவுகள் பரிசோதனைக்கு உள்ளாயின.

அவற்றின் உதவியால், அந்நிறுவனம், 450 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாமல், கறுப்பு பணமாக மாற்றியது கண்டறியப்பட்டது.மேலும், கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாய் மற்றும் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு 'கரன்சி'யும் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகள் தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X