சுயேச்சை எம்.பி., மும்பையில் தற்கொலை?

Added : பிப் 23, 2021
Share
Advertisement
மும்பை : தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின், சுயேச்சை எம்.பி., மோகன் தில்கர், மும்பை ஓட்டலில், நேற்று காலை சடலமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலையா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச லோக்சபா எம்.பி., மோகன் தில்கர். மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் பிரபல ஓட்டல் அறையில், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த

மும்பை : தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின், சுயேச்சை எம்.பி., மோகன் தில்கர், மும்பை ஓட்டலில், நேற்று காலை சடலமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலையா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச லோக்சபா எம்.பி., மோகன் தில்கர். மஹாராஷ்டிர மாநிலம், மும்பையின் பிரபல ஓட்டல் அறையில், நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.மோகன் தில்கர், ஏழாவது முறையாக தாத்ரா நாகர் ஹவேலி எம்.பி.,யாக உள்ளார். இவர், 2019ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.இவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X