பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி, குனியமுத்துாருக்கு இனி நான்கு நாளுக்கு ஒருமுறை குடிநீர்!

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை:குறிச்சி மற்றும் குனிய முத்துார் பகுதிகளில், 6 முதல், 8 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது.இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை சீராக வழங்கும் வகையில், குனியமுத்துார் பகுதிக்கு ரூ.71.68 கோடியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அன்பு நகர், பி அண்டு டி காலனி, கோவைப்புதுார், சுகுணாபுரம், சாய்கார்டன், பாலு அவென்யூ,

கோவை:குறிச்சி மற்றும் குனிய முத்துார் பகுதிகளில், 6 முதல், 8 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது.இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு ஒருமுறை சீராக வழங்கும் வகையில், குனியமுத்துார் பகுதிக்கு ரூ.71.68 கோடியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அன்பு நகர், பி அண்டு டி காலனி, கோவைப்புதுார், சுகுணாபுரம், சாய்கார்டன், பாலு அவென்யூ, பாலாஜி நகர் ஆகிய ஏழு இடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டு, பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம், குனியமுத்துார் பகுதியில் வசிப்போருக்கு, இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 20 ஆயிரம் குடியிருப்புகளுக்கு புதிதாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், குறிச்சி பகுதியில், 13 தொட்டிகள் கட்டப்பட்டு, 23 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதில், தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவைப்புதுார், முல்லை நகரில் கட்டியுள்ள தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகத்தை, அமைச்சர் வேலுமணி நேற்று துவக்கி வைத்தார். டி. ஆர்.ஓ., ராமதுரை முருகன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரவீந்திரன், ஆலோசகர் சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X