ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு, நிதி திரட்டும் பொருட்டு, பணமாக்க கூடிய, ரயில்வே சொத்துக்களை அடையாளம் காணும் பணியை, ரயில்வே நிர்வாகம் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை, பயணியர் ரயில் சேவை வாயிலாக, 2019ம் ஆண்டில், 53 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு, பயணியர் ரயில் சேவை பெரிய அளவில் முடங்கியதால், 2020ம் ஆண்டின், பயணியர் ரயில் சேவை வாயிலாக, 4,600 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. பட்ஜெட் உரைஇந்த இழப்பை ஈடுசெய்ய, பயன்பாட்டில் இல்லாத, ரயில்வே சொத்துக்களை அடையாளம் பார்த்து, அதை தனியாரிடம் குத்தகைக்கு வழங்கி, அதன் வாயிலாக வருமானத்தை பெருக்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக விவாதிக்க, 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தலைமையில், சமீபத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா, பொருளாதார விவகாரத்துறை செயலர் தருண் பஜாஜ் உட்பட, பல்வேறு துறை செயலர்களும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நிதி திரட்டுவதற்காக, பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள சொத்துக்களை, அடையாளம் காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
எதிர்பார்ப்புஇதில் திரட்டப்படும் நிதி வாயிலாக, 30 திட்டங்களை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 30 சொத்துக்களை அடையாளம் காணும் பணிகள் துவங்கியுள்ளன.இந்த சொத்துக்கள் வாயிலாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE